/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாங்கனி கண்காட்சி நடத்த இடம் ஆய்வு
/
மாங்கனி கண்காட்சி நடத்த இடம் ஆய்வு
ADDED : ஜூன் 30, 2024 01:21 AM
கிருஷ்ணகிரி,ருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி நடத்துவது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் சரயு இடங்களை ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரியில் கடந்த, 1992 முதல் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடந்து வருகிறது. நடப்பாண்டில் மாங்கனி கண்காட்சி நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. வழக்கமாக கண்காட்சி நடக்கும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்தக்கூடாது என ஒரு தரப்பினரும், அங்கேயே நடத்த வலியுறுத்தி, நகராட்சியில்
தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மா சீசன் முடிந்த நிலையில், மாங்கனி கண்காட்சி நடத்துவது குறித்து, மாவட்ட நிர்வாகம் அறிவிக்கவில்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதனிடையே காட்டிநாயனப்பள்ளி முருகர் கோவில் அருகே அல்லது கிருஷ்ணகிரி டோல்கேட் அருகிலுள்ள மைதானத்தில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்று, கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே மைதானத்தில் மாங்கனி கண்காட்சி நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, மாங்கனி கண்காட்சிக்கு இடவசதிகள் போதுமா, வாகனங்கள் நிறுத்த, பொதுமக்கள் வந்து செல்ல, இடையூறு இல்லாமல் இருக்குமா என்பது குறித்து,
அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, கிருஷ்ண
கிரி ஆர்.டி.ஓ., பாபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.