/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போக்சோ வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்; அரசுக்கு பரிந்துரை
/
போக்சோ வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்; அரசுக்கு பரிந்துரை
போக்சோ வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்; அரசுக்கு பரிந்துரை
போக்சோ வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்; அரசுக்கு பரிந்துரை
ADDED : ஜூன் 27, 2024 03:45 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் போக்சோ சட்டத்தில், பதியப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும், பாதிக்கப்பட்ட குழந்தை அல்லது அவரது சார்பில் போலீசில் புகார் அளித்தவுடன் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதியவும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதிலுள்ள தாமதத்தை களையவும், நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாகவும் தேவையான ஆவணங்களை, போலீசார் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காண, சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து, அரசிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், ஏ.டி.எஸ்.பி., சங்கு, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.