/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
. மாநில அளவிலான விளையாட்டு போட்டி ஸ்ரீ மாருதி மெட்ரிக் பள்ளி மாணவர் தேர்வு

ADDED : ஆக 22, 2025 01:37 AM
கிருஷ்ணகிரி, தமிழக அரசின் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பல்வேறு போட்டிகள் நடந்து வருகிறது. இதில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட வி.மாதேப்பள்ளி, ஸ்ரீ மாருதி மெட்ரிக் பள்ளி மாணவர் பவன், குண்டு மற்றும் வட்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இதன் மூலம் அவர், மாநில அளவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றார். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவனையும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோரை, பள்ளி நிறுவனர் ஜெயராமன், தாளாளர் தனுஜா ஜெயராமன், இயக்குனர் மேகமாலா, செயலாளர் நவீன்குமார் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.