/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திருடப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் கர்நாடகா எல்லை அருகே மீட்பு
/
திருடப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் கர்நாடகா எல்லை அருகே மீட்பு
திருடப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் கர்நாடகா எல்லை அருகே மீட்பு
திருடப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் கர்நாடகா எல்லை அருகே மீட்பு
ADDED : ஜூன் 09, 2024 04:30 AM
ஓசூர்: ஓசூரில் திருடப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம், கர்நாடகா மாநில எல்லை அருகே மீட்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையிலுள்ள பெரியார் நகரில் வசிப்பவர் ராஜா, 66; டிரைவரான இவர், ஆம்புலன்ஸ் வாகனம் வைத்து ஓட்டி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு ஓசூர் அரசு மருத்துவமனை அருகே, சி.எஸ்.ஐ., தேவாலயத்தை ஒட்டிய ஸ்டாண்டில் ஆம்புலன்சை நிறுத்தியிருந்தார். நேற்று காலை சென்று பார்த்தபோது ஆம்புலன்சை காணவில்லை. ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அப்பகுதி, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் பார்வையிட்டபோது, ஒருவர் ஆம்புலன்சை திருடி சென்றது தெரிந்தது.
போலீசார் வாகனத்தை தேடி வந்த நிலையில், அத்திப்பள்ளி அருகே, பல்லுார் சாலையில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் கேட்பாரற்று நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் பார்த்தபோது, அது டிரைவர் ராஜாவின் ஆம்புலன்ஸ் என தெரிந்தது. ஆம்புலன்ஸ் பழுதானதால் மர்மநபர்கள் அப்படியே விட்டு விட்டு தப்பியது தெரிந்தது. ஆம்புலன்சை மீட்டு ராஜாவிடம் ஒப்படைத்த போலீசார், திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.