/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெண்கல பதக்கம் வென்ற நாளந்தா பள்ளி மாணவர்கள்
/
வெண்கல பதக்கம் வென்ற நாளந்தா பள்ளி மாணவர்கள்
ADDED : செப் 16, 2024 02:34 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளி மாணவர் மதுமோகன், காரைக்குடி செட்டிநாடு சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த தென்மண்டல அளவிலான சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கிடையிலான தேக்வாண்டோ போட்டியில், 17 வயது பிரிவில் வெண்கல பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதேபோல், சென்னை மகாலட்சுமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த மாநில அளவிலான கிளஸ்டர்ஸ் பேட்மிட்டன் போட்டியில், 17 வயது பிரிவில் மாணவர்கள் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், பள்ளி நிர்வாக இயக்குனர்கள் வழக்கறிஞர் கவுதம், டாக்டர் புவியரசன் மற்றும் பள்ளியின் கல்வி இயக்குனர், முதல்வர், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.