/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இளம்பெண் தற்கொலை சப் கலெக்டர் விசாரணை
/
இளம்பெண் தற்கொலை சப் கலெக்டர் விசாரணை
ADDED : செப் 03, 2024 04:42 AM
ஓசூர்: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதுார் அருகே சாமியார்வீடு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பூபதி, 23; தண்டுகாரன்பட்டியை சேர்ந்த காசி மகள் நித்யா, 23; இருவரும் காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜூன், 10ல் திரு-மணம் செய்து கொண்டனர்.
இருவரும் ஓசூர் அருகே தனியார் நிறுவனங்களில் பணியாற்றியதால், பாகலுார் ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்தனர். கட்டுமான தொழிலாளர் திருமண உதவித்-தொகையை பெற, திருமண புகைப்படம் தருமாறு, மகள் நித்யா-விடம், தந்தை காசி கேட்டார். கணவர் பூபதியிடம், திருமண ஆல்பத்தை பெற்று தர நித்யா கேட்டுள்ளார். ஊதியம் கிடைத்தவுடன் வாங்கி தருவதாக பூபதி பதிலளித்தார். இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மனமு-டைந்த நித்யா, நேற்று முன்தினம் காலை, வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்தார். திருமணமான, 3 மாதங்களுக்குள் பெண் இறப்பால், ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா விசாரிக்கிறார். ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.