/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பட்டா கேட்டு தேர்தல் புறக்கணிப்பு தாசில்தார், போலீசார் பேச்சுவார்த்தை
/
பட்டா கேட்டு தேர்தல் புறக்கணிப்பு தாசில்தார், போலீசார் பேச்சுவார்த்தை
பட்டா கேட்டு தேர்தல் புறக்கணிப்பு தாசில்தார், போலீசார் பேச்சுவார்த்தை
பட்டா கேட்டு தேர்தல் புறக்கணிப்பு தாசில்தார், போலீசார் பேச்சுவார்த்தை
ADDED : மார் 25, 2024 01:04 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துகோட்டை பஞ்.,ல், ஏணிபண்டா,
வீரசெட்டி ஏரி, ஓசஹள்ளி, சொப்புகுட்டை, குருபரபள்ளி, ஆலத்தி,
குடிசல்பைல், கொல்லள்ளிபைல், மல்லிகார்ஜூன துர்க்கம் உள்ளிட்ட
கிராமங்கள் உள்ளன.
இங்கு, 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்
வசிக்கின்றன. இதில், பெரும்பாலான வீடுகள், அரசு புறம்போக்கு
நிலத்தில் உள்ளன. கடந்த, 60 ஆண்டுகளாக, 500 ஏக்கருக்கு மேலான அரசு
புறம்போக்கு நிலங்களை சுவாதீனம் செய்து, விவசாயம் செய்து வரும்
நிலங்களுக்கு, பட்டா வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள்
கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அரசு பட்டா வழங்காமல்
இழுத்தடித்து வருகிறது.
இக்கிராம மாணவ, மாணவியர் பள்ளி செல்ல பஸ்
வசதி இல்லை. பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை
இல்லாததால், லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, நேற்று
குந்துக்கோட்டை கிராம மக்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தும், கறுப்பு கொடி
பிடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம்,
தேன்கனிக்கோட்டை தாசில்தார் பரிமேலழகர் மற்றும் போலீசார்
பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட கலெக்டரிடம் பேசி விட்டு,
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தாசில்தார் உறுதியளித்தார்.
இதையடுத்து, தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

