/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி கடைகளில் சோதனை பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்
/
கிருஷ்ணகிரி கடைகளில் சோதனை பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி கடைகளில் சோதனை பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி கடைகளில் சோதனை பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்
ADDED : செப் 05, 2024 03:38 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட, ரவுண்டானா அருகிலுள்ள கடைகளில், பாலித்தீன் கவர்கள் விற்பனை, பயன்பாடு உள்ளதா என, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு மற்றும் நகராட்சி தலைவர் பரிதா நவாப் ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
இதில், பல கடைகளில் தடை செய்யப்-பட்ட பிளாஸ்டிக் கவர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறி-முதல் செய்யப்பட்டன. மேலும், இனி பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து, அவர்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி நகரிலுள்ள அனைத்து கடைகளிலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்-களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது. இங்கு பிளாஸ்டிக் கவர்கள் கிடையாது. எனவே வாடிக்கையாளர்கள் வரும்போது, மஞ்சள் பைகளை கொண்டு வரவேண்டும் என, கடைக்காரர்கள் விளம்பரப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதில், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ., மாதையன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பலர் உடனி-ருந்தனர்.