/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இல்லீகள் சம்பவங்களும் நடக்கும் தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாஜி மா.செ., பேச்சால் பரபரப்பு
/
இல்லீகள் சம்பவங்களும் நடக்கும் தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாஜி மா.செ., பேச்சால் பரபரப்பு
இல்லீகள் சம்பவங்களும் நடக்கும் தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாஜி மா.செ., பேச்சால் பரபரப்பு
இல்லீகள் சம்பவங்களும் நடக்கும் தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாஜி மா.செ., பேச்சால் பரபரப்பு
ADDED : ஆக 29, 2024 09:55 PM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் நடந்த தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், அமைச்சர் முன்னிலையில், தி.மு.க.,விலும் இல்லீகல் சம்பவங்கள் நடக்கும் என முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
கிருஷ்ணகிரியில் நேற்று, தி.மு.க., கிழக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. உணவுத்துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி கலந்து கொண்டார். இதில் தி.மு.க., நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை பொருத்தவரை முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்த செங்குட்டுவனுக்கும், தற்போதைய மாவட்ட செயலாளர் மதியழகனுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. மேலும் கட்சி தலைமை மதியழகன் பக்கம் சாய்ந்ததாலும், செங்குட்டுவன் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக மதியழகன் பக்கம் தாவியதும் செங்குட்டுவனை மேலும் எரிச்சலுக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில் நடந்த கூட்டத்தில், தன் மனதில் இருந்ததை வெளிப்படையாக பேசி செங்குட்டுவன் பரபரப்பை ஏற்படுத்தினார், அவர் பேசும்போது, கட்சியில் மூத்த நிர்வாகிகளை யாரும் மதிப்பதில்லை, அமைச்சர் இது குறித்து கேட்டால் அதை சொல்லலாம் என நினைத்தால் அதுவும் நடக்கவில்லை. இதையெல்லாம் பொதுக்கூட்டத்தில் சொல்ல முடியாது. அதனால் கட்சி கூட்டத்தில் சொல்கிறேன்.
என் ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கூட என்னை அழைக்க மறுக்கிறார்கள். மாவட்ட செயலாளருக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டேன். அது கட்சி தலைமை முடிவு. நான், மாவட்டத்தில், 40 ஆண்டுகளாக கிராமம், கிராமமாக சென்று கட்சியை வளர்த்தேன். என்னை மதிக்க மறுக்கிறார்கள். அதிகாரிகளுக்கும் தி.மு.க.,வினருக்கும் பெரிய கேப் இருக்கிறது.எல்லாவற்றையும லீகலாக செய்ய வேண்டும் என்பது தவறு.
இல்லீகள் செயல்களும் நடக்கும். அதற்காக தி.மு.க.,வினரை விட்டுவிட முடியுமா அரவணைத்து செல்ல வேண்டும். தெரியாவிட்டால் மாவட்ட செயலாளருக்கு நான் சொல்லி கொடுக்கிறேன். என பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக பள்ளிகளில் என்.சி.சி., முகாம் நடந்து மாணவியர் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் இவரது பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜாதி ரீதியாக பேசியதன் விளைவாக கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த செங்குட்டுவன், சட்ட விரோத செயல்கள் நடந்தாலும் அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும் என பேசியது விமர்சனத்துள்ளாகியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தமிழக அரசின் சட்ட திட்டங்கள் மற்றும் முதல்வர் ஆணைப்படி மட்டுமே நடப்பேன். சட்டம்தான் முக்கியம் எனக்கூறி சமாளித்தார்.