/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மது குடிப்பதை கண்டித்த மனைவியை அடித்து கொலை செய்து விட்டு கணவரும் தற்கொலை
/
மது குடிப்பதை கண்டித்த மனைவியை அடித்து கொலை செய்து விட்டு கணவரும் தற்கொலை
மது குடிப்பதை கண்டித்த மனைவியை அடித்து கொலை செய்து விட்டு கணவரும் தற்கொலை
மது குடிப்பதை கண்டித்த மனைவியை அடித்து கொலை செய்து விட்டு கணவரும் தற்கொலை
ADDED : ஆக 06, 2024 12:29 AM
கிருஷ்ணகிரி:பர்கூர் அருகே, மது குடிப்பதை கண்டித்த மனைவியை அடித்து கொன்ற முதியவர், தானும் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கரீம் சாகிப் தெருவை சேர்ந்தவர் நாகராஜ், 70; இவர் மனைவி பாலம்மாள், 60. நாகராஜ் டூவீலரில் சென்று பாத்திர வியாபாரம் செய்து வந்துள்ளார். மனைவியுடன், மகள் துளசியம்மாள் வீட்டின் மாடியில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவரை, மது, சிகரெட் பிடிக்கக்கூடாதென மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மது பழக்கமுள்ள நாகராஜ், தொடர்ந்து குடித்து வந்துள்ளார். மனைவி கண்டித்ததால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று மாலை வரை, இருவரும் மாடியிலிருந்து கீழே வரவில்லை.
மாலையில் கல்லுாரியிலிருந்து வீடு திரும்பிய நாகராஜின் பேத்தி, தாத்தாவை தேடி மாடிக்கு சென்றுள்ளார். வீடு உள்பக்கமாக தாழிட்டு இருந்ததால், ஜன்னல் வழியாக பார்த்தபோது, வீட்டினுள் ரத்தக்கறை இருந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ரத்த காயங்களுடன் பாலம்மாளும், அருகில் நாகராஜ் துாக்கில் தொங்கிய நிலையிலும் இறந்து கிடந்தனர்.
பர்கூர் போலீசார் சடலங்களை மீட்டனர். மது குடிப்பதை கண்டித்த மனைவி பாலம்மாளை அடித்து கொன்ற நாகராஜ், தானும் துாக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.