/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றியவர் கைது
/
திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றியவர் கைது
ADDED : ஜூன் 30, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உத்தனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த பிக்கப் வாகன டிரைவர் அஜித்குமார், 23; இவரும், 19 வயது இளம்பெண்ணும் கடந்த, 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த அஜித்குமார், அப்பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார். பின் ஜாதி பெயரை கூறி, திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இது தொடர்பாக, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம்
அப்பெண் புகார் செய்தார். போலீசார், அஜித்
குமாரை கைது செய்தனர்.