/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது
/
பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது
ADDED : மே 05, 2024 01:54 AM
ஓசூர்:ஓசூரில், வேலை வாங்கி தருவதாக கூறி வரவழைத்து, இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கடலுார்
மாவட்டம், விருத்தாச்சலம் அருகே கீழப்பாவூரை சேர்ந்தவர் மணிகண்டன்,
26. இவர், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது உறவினர் ஒருவர், தனக்கு தெரிந்த, 26 வயதான பெண்ணுக்கு ஓசூரில்
வேலை வாங்கி கொடுக்குமாறு மணிகண்டனிடம் கேட்டுள்ளார். அப்பெண்ணின்
மொபைல் எண்ணை வாங்கிய மணிகண்டன், அவரிடம் பேசி ஓசூருக்கு
வரவழைத்துள்ளார்.
ஓசூர் வந்த அந்த பெண்ணை ஆசைவார்த்தை கூறி, ஓசூர் -
பாகலுார் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின், ஆள்
நடமாட்டம் இல்லாத காலி இடத்திற்கு அழைத்து சென்று, அப்பெண்ணை நேற்று
மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவரிடம் இருந்து தப்பிய
பெண், அழுத படி அங்கிருந்து தப்பியோடினார். இதை பார்த்த
பொதுமக்கள், பெண்ணை நல்லுார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். பெண்
கொடுத்த புகார்படி, நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து, மணிகண்டனை
கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.