ADDED : ஆக 15, 2024 01:58 AM
ஓசூர்,சூளகிரி ஒன்றியம், தியாகரசனப்பள்ளி பஞ்., உட்பட்ட ஒமதேப்பள்ளி ஏரி, பவர் கிரேடு எதிரே அமைந்துள்ளது.
இங்கு விவசாய நிலங்களுக்கு மண் எடுக்க சூளகிரி தாசில்தார் சக்திவேல் அனுமதி கொடுத்துள்ளார். இதை பயன்படுத்தி தனி நபர்கள் டிப்பர் லாரிகளில் மண்ணை அள்ளி, கர்நாடகாவிற்கு கடத்தினர். கடந்த ஒரு வாரத்திற்கும் குறிப்பிட்ட அளவையும் தாண்டி வெட்டி, பகல் நேரத்திலேயே மண் கொள்ளை நடந்தது. வருவாய்த்துறையும் கண்டுகொள்ளவில்லை. சூளகிரி பொதுமக்கள் தொடர்ந்து புகார் படி, சூளகிரி தாலுகா தாசில்தார் சக்திவேல், ஒமதேப்பள்ளி ஏரியில் மண் அள்ள தடை நேற்று விதித்தார். ஆனாலும் தடையை மீறி மண் கடத்தல் நடந்தது. லாரிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக, பொதுமக்கள் குற்றம்சாட்டினர். அதேபோல், ஓசூர் தாலுகாவில் உள்ள ஏரிகளிலும், அதிகாரிகள் ஆசியுடன் கர்நாடகா மாநிலத்திற்கு மண் கடத்தப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.