/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இருவேறு சாலை விபத்தில் சிறுவன் உட்பட இருவர் பலி
/
இருவேறு சாலை விபத்தில் சிறுவன் உட்பட இருவர் பலி
ADDED : ஜூன் 11, 2024 01:52 PM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, கோட்டூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரின் மகன் ஹரிபிரசாந்த், 7; நேற்று காலை, 11:00 மணியளவில், கோட்டூர் மாரியம்மன் திருவிழாவிற்காக தேசிய நெடுஞ்சாலையோரம் கிராம மக்கள் கட்டிய டிஜிட்டல் பேனரை பார்க்க சென்றுள்ளார்.
அப்போது பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற மாருதி செல்ட்ரான் கார் மோதியதில் படுகாயமடைந்த சிறுவன் பலியானான். அதேபோல் மத்துார் அடுத்த, ஜிட்டானப்பள்ளியை சேர்ந்தவர் மாதம்மாள், 53; இவர் கணவர் பூங்காவனம், 55; இருவரும் டி.வி.எஸ்., சூப்பர் எக்ஸ்.எல்., மொபட்டில் மத்துாரிலிருந்து வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு தொகரப்பள்ளி வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது மொபட்டில் இருந்து இருவரும் தவறி விழுந்ததில் மாதம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த, 2 சம்பவங்கள் குறித்தும், மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.