/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பா.ம.க., துண்டு அணிந்து நடனம் ஆசிரியர்கள் இருவர் 'துாக்கியடிப்பு'
/
பா.ம.க., துண்டு அணிந்து நடனம் ஆசிரியர்கள் இருவர் 'துாக்கியடிப்பு'
பா.ம.க., துண்டு அணிந்து நடனம் ஆசிரியர்கள் இருவர் 'துாக்கியடிப்பு'
பா.ம.க., துண்டு அணிந்து நடனம் ஆசிரியர்கள் இருவர் 'துாக்கியடிப்பு'
ADDED : மார் 09, 2025 02:38 AM
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே, அரசு பள்ளி ஆண்டு விழாவில் கட்சிக் கொடி நிறத்திலான துண்டுடன் மாணவர்கள் நடனமாடிய விவகாரத்தில், தலைமை ஆசிரியர் மற்றும் தமிழாசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சோபனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 4ம் தேதி ஆண்டு விழா நடந்தது. விழாவில், நடனமாடிய மாணவர்கள், பா.ம.க., கட்சிக் கொடி நிறத்திலான துண்டு அணிந்து கொண்டு நடனமாடினர்.
இதற்கு, பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாணவர்கள் கட்சி துண்டுடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஷ் விசாரித்தார்.
நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியர் விஜயகுமாரை, பன்னிஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியர் சுப்பிரமணியை, மேட்டுப்புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்து, மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ் உத்தரவிட்டுள்ளார்.