நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்,
கெலமங்கலம் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம், தலைவர் கேசவமூர்த்தி தலைமையில் நடந்தது.
துணைத்தலைவர் சீனிவாசன், பி.டி.ஓ.,க்கள் சதீஷ்குமார், சாந்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஜெக்கேரி பஞ்.,ல் உள்ள ஜம்புகான் ஏரி கடந்த, 30 ஆண்டுகளாக தண்ணீர் வரத்தின்றி காய்ந்து கிடக்கிறது. கெலமங்கலம் டவுன் பஞ்.,க்குள் ஏரி வருவதால், அந்த ஏரியை கெலமங்கலம் டவுன் பஞ்., வசம் ஒப்படைப்பது என தீர்மானிக்கப்பட்டது. அலுவலக மேலாளர் லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.