ADDED : மார் 24, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், சூளகிரி அடுத்த பாத்தக்கோட்டாவை சேர்ந்தவர் கொண்டப்பா, 46, கூலித்தொழிலாளி; இவர் நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு, பாத்தக்கோட்டா - உத்தனப்பள்ளி சாலையில், டி.வி.எஸ்., விக்டர் பைக்கில் சென்றார். அப்போது, சின்ன பேட்டகானப்பள்ளியை சேர்ந்த வெங்கடேஷ், 37, என்பவர், 'லிப்ட்' கேட்டு ஏறினார்.
சின்ன பேட்டகானப்பள்ளி கிராமம் அருகே சென்ற போது, எதிரே வந்த ஈச்சர் லாரி, பைக் மீது மோதியது. இருவரும் படுகாயமடைந்தனர். கொண்டப்பா, சம்பவ இடத்திலேயே பலியானார். வெங்கடேஷ், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

