/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
10 பஸ்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்
/
10 பஸ்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்
ADDED : நவ 14, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி வட்டார போக்கு
வரத்து அலுவலர் ஈஸ்வர மூர்த்தியின் உத்தரவு படி, மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும்படை ஆய்வாளர் அன்புசெழியன் மற்றும் அலுவலர்கள், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் அரசு மற்றும் தனியார் பஸ்களில், அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்களை ஆய்வு செய்தனர்
. இதில், அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்திய, 2 அரசு பஸ்கள் மற்றும் 8 தனியார் பஸ்கள் என, 10 பஸ்களில், அரசு அனுமதித்த டெசிபல் அளவை தாண்டி அதிக ஒலி எழுப்பிய ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 1,000 ரூபாய் முதல், 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

