ADDED : மே 13, 2026 04:40 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், 10 தாசில்தார்கள் இட-மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சூளகிரி சிப்காட் நிலை - 5 நிலம் எடுப்பு தனி தாசில்தார் ஜெகதீஷ்குமார், ஓசூர் தாசில்தாராகவும், சூளகிரி சிப்காட் நிலை - 5 அலகு - 2 தனி தாசில்தார் சக்தி, பர்கூர் தாசில்-தாராகவும், குருபரப்பள்ளி தனி தாசில்தார் வேலு, தேன்கனிக்-கோட்டை தாசில்தாராகவும், சூளகிரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மோகன், குருபரப்பள்ளி சிப்காட் தனி தாசில்தாரா-கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி டாஸ்மாக் துணை மேலாளர் தெய்வநாயகி, சூள-கிரி சிப்காட் நிலை - 5 தனி தாசில்தாராகவும், பர்கூர் தாசில்தார் சின்னசாமி, சூளகிரி சிப்காட் நிலை - 5 நிலம் எடுப்பு தனி தாசில்-தாராகவும், தேன்கனிக்கோட்டை தாசில்தார் கங்கை, சூளகிரி நிலை - 4 தனி தாசில்தாராகவும், ஓசூர் தாசில்தார் குணசிவா, டாஸ்மாக் சில்லறை விற்பனை துணை மேலாளராகவும், சூளகிரி தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) சத்யா, கிருஷ்ணகிரி இசைவு தீர்-வாய தனி தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்து வந்த சித்ரா, சூள-கிரி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்-ளனர்.
