தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 100 சதவீதம் ஓட்டளிக்க மக்களிடம் விழிப்புணர்வு

100 சதவீதம் ஓட்டளிக்க மக்களிடம் விழிப்புணர்வு

100 சதவீதம் ஓட்டளிக்க மக்களிடம் விழிப்புணர்வு


ADDED : ஏப் 12, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் (டீல்) நிறுவனம் சார்பில், ஓசூர் சட்டசபை தொகுதியில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, ஓசூர் ரயில்வே ஸ்டேஷன், உழவர் சந்தை, ராமநாயக்கன் பூங்கா ஆகிய இடங்களில், 'டீல்' நிறுவன ஊழியர்களான சாந்திகணேஷ், முத்துமணிகண்ணன், ஸ்வேதா, ஜோதிபவார், சாரதி, ஜோதிகா ஆகியோர், விழிப்புணர்வு நாடகத்தை நடித்து காட்டினர். ஏற்பாடுகளை, 'டீல்' பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி பிரபு, ஓசூர் ஆர்.ஐ., சென்னம்மாள், மாநகராட்சி உதவி பொறியாளர் கோவிந்தராசு உட்பட பலர் பங்கேற்றனர்.

ஓசூர் புனித ஜோசப் கலை அறிவியல் கல்லுாரி

யில், முதல்முறையாக ஓட்டளிக்கும் மாணவியருக்கு, அதன் முக்கியத்துவம் குறித்து, மாவட்ட சமூக நல அலுவலர் சக்தி சுபாஷினி, ஆராதனா தன்னார்வ தொண்டு நிறுவனர் ராதா ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 100 சதவீதம் ஓட்டளிப்பதை வலியறுத்தி, கல்லுாரி மைதானத்தில் ஆங்கில எழுத்தால் எழுதி, அதில் அனைத்து மாணவர்களும் நின்று கொண்டு, 'முதல்முறை வாக்களிப்போம்' என, உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராகவி, புனித ஜோசப் பெண்கள் கல்லுாரி முதல்வர் சோலின் ரோஸ், செயலாளர் டோரா கிரேசி ஜெயசீலி, பேராசிரியர்கள் மீனாட்சி, லின்சி சலஸ்தீனா,

சவுமியா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us