/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிறப்பு காவல் 7ம் அணி சார்பில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழா
/
சிறப்பு காவல் 7ம் அணி சார்பில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழா
சிறப்பு காவல் 7ம் அணி சார்பில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழா
சிறப்பு காவல் 7ம் அணி சார்பில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழா
ADDED : நவ 07, 2024 12:57 AM
சிறப்பு காவல் 7ம் அணி சார்பில்
1,000 மரக்கன்றுகள் நடும் விழா
போச்சம்பள்ளி, நவ. 7-
போச்சம்பள்ளியில், தமிழ்நாடு அரசு சிறப்பு காவல், 7ம் அணி செயல்பட்டு வருகிறது. அங்கு சந்தன மரக்கன்று, காட்டு நெல்லி, எலுமிச்சை, புங்கை, வசந்தராணி உள்ளிட்ட பல்வேறு ரகங்களை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.
மேலும் தமிழ்நாடு போலீசாருடன் இணைந்து, பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறியும் பணியில், ஈடுபட்ட, 7ம் அணி போலீசார், 34 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், 7ம் அணி, எஸ்.பி., சங்கு, துணை எஸ்.பி., வெங்கடாசலம், ஏ.டி.எஸ்.பி., மகேஸ்வரி, அலுவலக நிர்வாகி பேபி நிர்மலா மற்றும் பலதுறையை சேர்ந்த, 7ம் அணி அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த பஞ்., தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து
கொண்டனர்.