/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மகள் ஏமாற்றியதாக 102 வயது தாய் புகார்
/
மகள் ஏமாற்றியதாக 102 வயது தாய் புகார்
ADDED : ஜன 28, 2025 12:33 AM

கிருஷ்ணகிரி : பர்கூர் அருகே, சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கியதாக, தன் இளைய மகள் மீது, 102 வயது தாய், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளியை சேர்ந்த 102 வயது மூதாட்டி ராஜம்மாள், தன் மகன் கிருஷ்ணன் என்பவருடன் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
என் கணவர் முருகன், பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். எனக்கு, ஐந்து மகள்கள், மூன்று மகன்கள். தந்தை வழி சொத்தாக எனக்கு, 1.28 ஏக்கர் நிலம் சிகரலப்பள்ளியில் உள்ளது. இதில், இளைய மகள் அம்சா, வீடு கட்ட, 3 சென்ட் நிலம் கேட்டார். கடந்த 1986ல் அந்த நிலத்தை தர நான் சம்மதித்தேன்.
ஆனால் அவர், எனக்கு தெரியாமல், 3 சென்ட்டுக்கு பதில் 27 சென்ட் நிலத்தை எழுதி வாங்கி விட்டார்.
மேலும், 49 சென்ட் நிலத்தையும் அபகரித்து விட்டார். என் சொத்தின் அசல் பத்திரத்தையும் பறித்து கொண்டார்.
தற்போது, என் சொத்துக்களை அனைத்து பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுக்க, பர்கூர் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றபோது தான், என் இளைய மகள் அம்சா, அவரது கணவர் அருணாச்சலம் ஆகியோர், என்னை ஏமாற்றி நிலங்களை அபகரித்தது தெரிந்தது.
இதுகுறித்து விசாரித்து என்னிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

