தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 10ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி

10ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி

10ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி


ADDED : மார் 13, 2026 07:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 07:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர் அடுத்த ஒன்னல்வாடியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் கோகுல், 15. ஓசூர் முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், விடுமுறை நாளான நேற்று, தொரப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் தன் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.

கோகுலுக்கு நீச்சல் தெரியாது என்பதால், பிளாஸ்டிக் கேனை கட்டி கொண்டு கிணற்றில் குளித்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கேன் அவிழ்ந்ததால், நீரில் மூழ்கி பலியானார். ஓசூர் டவுன் போலீசார், மாணவன் கோகுலின் சடலத்தை மீட்டு, விசாரிக்கின்றனர். தேர்வு எழுத இருந்த மாணவன் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us