/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்ட கிரிக்கெட் போட்டி 11 வக்கீல் அணிகள் பங்கேற்பு
/
மாவட்ட கிரிக்கெட் போட்டி 11 வக்கீல் அணிகள் பங்கேற்பு
மாவட்ட கிரிக்கெட் போட்டி 11 வக்கீல் அணிகள் பங்கேற்பு
மாவட்ட கிரிக்கெட் போட்டி 11 வக்கீல் அணிகள் பங்கேற்பு
ADDED : ஆக 09, 2025 01:49 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வக்கீல்கள் சங்கம் சார்பில், வக்கீல்கள் மன அழுத்தத்தை குறைக்கவும், நட்புறவை வளர்க்கவும், மாவட்ட அளவில் வக்கீல்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி, ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் நேற்று துவங்கியது.
ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ், போட்டியை துவக்கி வைத்தார்.
ஒசூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை பகுதியிலிருந்து மொத்தம், 11 வக்கீல்கள் அணி பங்கேற்றுள்ளன. நாளை (ஆக., 10) இறுதி போட்டி நடக்கிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு, கோப்பைகள் வழங்கப்பட உள்ளன. ஏற்பாடுகளை, ஓசூர் வக்கீல்கள் சங்க தலைவர் சிவசங்கர், செயலாளர் கதிரவன், பொருளாளர் ஜனார்தனன், துணைத்தலைவர் முனிசந்திரா, முன்னாள் செயலாளர் திம்மராயப்பா, நுாலகர் லோகநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.