ADDED : ஏப் 01, 2024 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த அனுமன்தீர்த்தம் சோதனைச்சாவடியில், சதாம் உசேன் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த டாடா சபாரி காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 33,750 ரூபாய் மதிப்புள்ள, 125 சால்வைகள் இருந்தன. விசாரணையில், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நாரியம்பட்டியை சேர்ந்த அல்லிமுத்து, 65; என்பதும், தர்மபுரி கிழக்கு மாவட்ட, பா.ம.க., தலைவராக இருந்து வருவதும் தெரிய வந்தது. உரிய ஆவணம் இல்லாததால், சால்வைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சதாம் உசேன் அளித்த புகார்படி, அரூர் போலீசார் அல்லிமுத்து மீது வழக்குப்பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.

