தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/13 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்: எஸ்.பி., அதிரடி

13 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்: எஸ்.பி., அதிரடி

13 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்: எஸ்.பி., அதிரடி


ADDED : நவ 13, 2026 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2026 04:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 13 எஸ்.ஐ.,க்களை இடமாற்றம் செய்து, மாவட்ட எஸ்.பி., அனிதா உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மத்திகிரியில் பணியாற்றி வந்த சிவராஜ், கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கும், கார்த்திகேயன் கந்திகுப்பத்திற்கும், நல்லுாரில் பணியாற்றி வந்த சிற்றரசு ஊத்தங்கரைக்கும், சிப்காட்டில் பணியாற்றிய ஜெயகணேஷ் ராயக்கோட்டைக்கும், பாகலுாரில் பணியாற்றிய பிரபாகரன் காவேரிப்பட்டணத்திற்கும், கந்திகுப்பத்தில் பணியாற்றிய பிரபாகரன் மத்திகிரி போலீஸ் ஸ்டேஷனுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதேபோல, கிருஷ்ணகிரி டவுன் ஸ்டேஷனில் பணியாற்றிய கணேஷ் நல்லுாருக்கும், காவேரிப்பட்டணத்தில் பணியாற்றிய அமர்நாத், ஓசூர் சிப்காட்டிற்கும், ஊத்தங்கரையில் பணியாற்றிய ராஜா சங்கிலிகருப்பன் அஞ்செட்டிக்கும், ஓசூர் ஹட்கோவில் பணியாற்றிய அறிவழகன் பாகலுாருக்கும், அஞ்செட்டியில் பணியாற்றிய மோகன், ஹட்கோவுக்கும், ஓசூர் டவுனில் பணியாற்றிய பூர்ணிமா, ஓசூர் போக்குவரத்து பிரிவுக்கும், அங்கு பணியாற்றி வந்த அமுதா, பர்கூர் போலீஸ் ஸ்டேஷனிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இதில், ஓசூர், மத்திகிரி, பாகலுார், நல்லுார் ஸ்டேஷன்களில் பணியாற்றி வந்த எஸ்.ஐ.,க்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கனிம வள கடத்தலை கட்டுப்படுத்துவதில் இப்

பகுதி போலீசார், மெத்தனமாக செயல்படுவதாக கூறப்பட்ட நிலையில், மாவட்ட எஸ்.பி., அனிதா அப்பகுதி எஸ்.ஐ.,க்களை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us