/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆசிரியர் தகுதி தேர்வு 1,327 பேர் 'ஆப்சென்ட்
/
ஆசிரியர் தகுதி தேர்வு 1,327 பேர் 'ஆப்சென்ட்
ADDED : நவ 17, 2025 03:36 AM
'
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை பணியாற்ற கூடிய இடைநிலை ஆசிரி-யர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஆசிரியர் தகுதி தேர்வு இரு நாட்கள் நடந்தன. நேற்று, 2ம் தாளிற்கான தேர்வு நடந்தது. இதற்கு மாவட்டத்தில் மொத்தம், 10,657 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
பர்கூர், எலத்தகிரி, கிருஷ்ணகிரி, சூளகிரி, குந்தாரப்பள்ளி, காவேரிப்பட்டணம் ஆகிய இடங்களில் மொத்தம், 34 மையங்-களில் தேர்வு நடந்தது. 9,330 பேர் தேர்வு எழுதிய நிலையில், 1,327 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. மாவட்ட அளவில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டன. தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்-சார வசதி செய்யப்பட்டிருந்தது. போலீசார் பதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

