ADDED : நவ 18, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: சூளகிரி ஒன்றியம், சானமாவு பஞ்., உப்பரதம்மண்டரப்பள்ளி, சானமாவு, டி.கொத்தப்பள்ளி, பென்னிக்கல் கிராமங்களில், 73.37 லட்சம் ரூபாய் மதிப்பிலும், பீர்ஜேப்பள்ளி பஞ்., நாயக்கனப்-பள்ளி மற்றும் பீர்ஜேப்பள்ளி, பாத்தக்கோட்டா, ராமாபுரம் கிரா-மங்களில், 60.60 லட்சம் ரூபாய் மதிப்பிலும், கழிவுநீர் கால்வாய், வீடுகளுக்கு குடிநீர் பைப்லைன், நீர்த்தேக்க தொட்டி, சிமென்ட், பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
இந்த வளர்ச்சி திட்ட பணிகளை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூஜை செய்து துவக்கி வைத்தார். தி.மு.க., மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சீனிவாசன், ஓசூர் கிரசர் ஓனர் பெடரேஷன் தலைவர் சம்பங்கி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஷேக்ரசீத், ஒன்றிய கவுன்சிலர் நாகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.