/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
1,353 வழக்குகளுக்கு கிருஷ்ணகிரியில் தீர்வு
/
1,353 வழக்குகளுக்கு கிருஷ்ணகிரியில் தீர்வு
ADDED : செப் 14, 2025 05:05 AM
கிருஷ்ணகிரி மாவட்ட
ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், லோக் அதாலத் என்ற தேசிய மக்கள் நீதிமன்றம்
நேற்று நடந்தது. கிருஷ்-ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும்,
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதியுமான லதா தலைமை வகித்து பேசுகையில்,
''மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நிலு-வையில் இருந்த, 1,353 வழக்குகளில்,
8.53 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது,'' என்றார்.
விரைவு மகளிர்
நீதிமன்ற அமர்வு நீதிபதி சுதா, மாவட்ட குடும்-பநல நீதிபதி நாகராஜன்,
சிறப்பு மாவட்ட நீதிபதி அமுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சாந்தி,
சிறப்பு சார்பு நீதி-பதி ஜெயந்தி, முதன்மை சார்பு நீதிபதி ஜெனிபர்,
கூடுதல் சார்பு நீதிபதி மோகன்ராஜ், சார்பு நீதிபதி மற்றும் மாவட்ட
சட்டப்ப-ணிகள் ஆணைக்குழு செயலாளர் பத்மநாபன், மாவட்ட உரிமை-யியல் நீதிபதி,
சுந்தரமூர்த்தி, வழக்கறிஞர் சங்க தலைவர் கோவிந்-தராஜூலு மற்றும்
வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.