காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் கி.கிரியில் 140 பேர் மீது வழக்கு
காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் கி.கிரியில் 140 பேர் மீது வழக்கு
ADDED : செப் 29, 2026 06:32 AM

கிருஷ்ணகிரி; ஓட்டுத்திருட்டு விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை கைது செய்ய வலியுறுத்தியும், அவரால் எடுக்கப்பட்ட முடிவுகளை மறு ஆய்வு செய்ய கோரியும் நேற்று பல்வேறு இடங்களில் காங்., கட்சியினர் ஆர்ப்-பாட்டம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட காங்., சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்-தது. மாவட்ட தலைவர்கள் ரகு, ஹரிஷ் பாபு தலைமை வகித்தனர். மாவட்ட துணைத்த-லைவர் சேகர், நகர தலைவர் லலித் ஆண்டனி முன்னிலை வைத்தனர். மாவட்ட துணைத் தலைவர் ரகமத்துல்லா வரவேற்றார். கிருஷ்ண-கிரி காங்.,- எம்.பி., கோபிநாத் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் உருவபொம்மையை காங்., கட்சியினர் எரித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்-தனர். இது தொடர்பாக, 140 பேர் மீது கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்-றனர்.
