/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் 14வது புத்தக திருவிழா துவக்கம்
/
ஓசூரில் 14வது புத்தக திருவிழா துவக்கம்
ADDED : ஜூலை 12, 2025 12:57 AM
ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், ஓசூர் மூக்கண்டப்பள்ளியில் உள்ள ஹில்ஸ் ஓட்டலில், 14வது புத்தக திருவிழா நேற்று மாலை துவங்கியது.
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், புத்தக கண்காட்சி அரங்குகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். மொத்தம், 110 அரங்குகள் அமைக்கப்பட்டு, 1 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மூன்று லட்சம் வாசகர்கள் புத்தக திருவிழாவை பார்வையிட வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும், 22ம் தேதி வரை புத்தக திருவிழா நடக்கிறது. தினமும் காலை, 11:00 முதல், இரவு, 9:00 மணி வரை கண்காட்சி அரங்குகளை இலவசமாக பார்வையிட்டு, பொதுமக்கள். 10 சதவீத தள்ளுபடியில் புத்தகங்களை வாங்கி கொள்ளலாம்.
அரசு பள்ளி மாணவ, மாணவியர் புத்தக திருவிழாவிற்கு வர பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினமும் மாலையில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி, அறிஞர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சொற்பொழிவாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாணவர்கள் புத்தகங்களை வாங்க, தன்னார்வலர்கள் உதவியுடன், 50 ரூபாய் மதிப்புள்ள கூப்பன்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை, புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர் சேதுராமன், தலைவர் ஆடிட்டர் பாலசுந்தரம், செயலாளர் சந்துரு, பொருளாளர் பாலகிருஷ்ணன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் உட்பட நிர்வாகிகள் செய்துள்ளனர்.