/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
15ல் பாகலுார் சாலை பணிகள்மாற்று பாதையில் வாகனங்க
/
15ல் பாகலுார் சாலை பணிகள்மாற்று பாதையில் வாகனங்க
ADDED : ஏப் 10, 2025 01:53 AM
15ல் பாகலுார் சாலை பணிகள்மாற்று பாதையில் வாகனங்கள்
ஓசூர்:ஓசூரிலுள்ள பாகலுார் சாலை வழியாக தினமும், 35,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஓசூர் ஜி.ஆர்.டி., அருகிலிருந்து துவங்கும் இச்சாலை, கே.சி.சி., நகர் அருகே உள்ள பாலம் வரை, 2 கி.மீ., துாரம் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், ஓசூர் நகருக்குள் இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், 10 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி வரும், 15ல் துவங்க உள்ளது. நகரின் முக்கிய சாலையான பாகலுார் சாலை புதிதாக அமைக்கப்பட உள்ளதால், வாகன போக்குவத்தை மாற்றியமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம், ஓசூர் சப்கலெக்டர் அலுவலகத்தில், சப்கலெக்டர் பிரியங்கா தலைமையில் நேற்று மாலை நடந்தது. போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், தன்னார்வலர்கள், மாநகராட்சி ஊழியர்கள், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பாகலுார் சாலை பணி முடியும் வரை, தர்மபுரியில் இருந்து, ராயக்கோட்டை வழியாக ஓசூர் வரும் வாகனங்கள், பாகலுார் செல்ல, ஓசூர் இன்னர் ரிங்ரோட்டில் அசோக் பில்லர் அருகே திரும்பி, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு சென்று, அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக கர்நாடகா மாநிலமான அத்திப்பள்ளி சென்று, சர்ஜாபுரம் வழியாக, பாகலுார் செல்ல வேண்டும். பாகலுாரிலிருந்து ஓசூர் வரும் வாகனங்கள், குடிசெட்லு அருகே இருந்து, முத்தாலி வழியாக ஓசூர் அலசநத்தம் வருவதற்கும், கிருஷ்ணகிரியில் இருந்து வரும் வாகனங்கள், பேரண்டப்பள்ளியில் வலது பக்கம் திரும்பி, கதிரேப்பள்ளி, புக்கசாகரம் வழியாக பாகலுார் செல்ல வேண்டும். இவ்வாறு, போக்குவரத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.