ADDED : ஜூலை 24, 2026 02:18 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், 15 பி.டி.ஓ.,க்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கடத்துார் பி.டி.ஓ., (வ.ஊ) சுருளிநாதன், பென்னா-கரம் ஒன்றியத்துக்கும், பென்னாகரம் ஒன்றிய (கி.ஊ) பி.டி.ஓ., கல்பனா பாலக்கோடுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். பாலக்கோடு பி.டி.ஓ., (வ.ஊ) நீலமேகம், பென்னாகரம் ஒன்றியத்துக்கும், அங்-கிருந்த ஜோதிகணேசன், அரூர் ஒன்றியத்திற்கும் மாற்றப்பட்டுள்-ளனர். அரூர் பி.டி.ஓ., (வ.ஊ)வாக இருக்கும் மார்க்ரெட், பாப்பி-ரெட்டிப்பட்டி பி.டி.ஓ.,வாக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த அறிவழகன், அதே ஒன்றியத்துக்கு பி.டி.ஓ., (வ.ஊ)வாக மாற்றப்-பட்டுள்ளார். பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பி.டி.ஓ., (கி.ஊ) அபுல்கலாம் ஆசாத் தர்மபுரி ஒன்றியத்துக்கும், அங்கிருந்த கும-ரேசன் (கி.ஊ) நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கும் மாற்றப்பட்டுள்-ளனர். நல்லம்பள்ளி பி.டி.ஓ., (கி.ஊ) லோகநாதன், பாலக்கோடு ஒன்-றியத்துக்கும், அங்கிருந்த சர்வோத்தமன் (கி.ஊ) தர்மபுரி ஒன்றி-யத்துக்கும், தர்மபுரி பி.டி.ஓ., (வ.ஊ) பொன்னு இருசன், தர்மபுரி-யிலுள்ள தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவன பி.டி.ஓ.,வாகவும், அங்கு பி.டி.ஓ,வாக உள்ள ராமச்சந்திரன், காரி-மங்கலம் ஒன்றியத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். காரிமங்கலம் பி.டி.ஓ., (வ.ஊ) சக்திவேல், அதே ஒன்றியத்துக்கு (கி.ஊ) பி.டி.ஓ.,வாகவும், அங்கிருந்த தனலட்சுமி மொரப்பூர் ஒன்றியத்-துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மொரப்பூர் பி.டி.ஓ.,(கி.ஊ) சத்யா தர்மபுரி மேற்கு உதவி இயக்குனர் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) பி.டி.ஓ.,வாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
