தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி போராடிய மா.திறனாளிகள் 152 பேர் கைது

உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி போராடிய மா.திறனாளிகள் 152 பேர் கைது

உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி போராடிய மா.திறனாளிகள் 152 பேர் கைது


ADDED : பிப் 11, 2026 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 07:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன் மாற்று திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பெரியசாமி, பொருளாளர் ஜெயராமன், துணை செயலாளர் மகாலிங்கம், துணைத்தலைவர் கோடீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. டில்லியில், 3,000 ரூபாய், ஹரியானாவில், 3,500 ரூபாய், தெலங்கானாவில், 4,106 ரூபாய் திரிபுராவில், 5,000 ரூபாய், புதுச்சேரியில், 4,000 ரூபாய் ஆந்திராவில், 15,500 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. அதேபோல தமிழகத்திலும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்ற, 82 பெண்கள் உள்பட மொத்தம், 152 பேரை கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us