sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16.09 லட்சம் வாக்காளர்

/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16.09 லட்சம் வாக்காளர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16.09 லட்சம் வாக்காளர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16.09 லட்சம் வாக்காளர்


ADDED : ஜன 23, 2024 10:15 AM

Google News

ADDED : ஜன 23, 2024 10:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட வாக்காளர்களின் இறுதி பட்டியலை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று வெளியிட்டு பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 6 சட்டசபை தொகுதிகளில், 8,07,389 ஆண், 8,02,219 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள், 305 உள்பட மொத்தம், 16,09,913 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதில், 37,571 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, 13,313 வாக்காளர்கள்

நீக்கப்பட்டுள்ளனர்.

ஊத்தங்கரை சட்டசபை தொகுதியில், 1,21,232 ஆண் வாக்காளர்கள், 1,21,289 பெண் வாக்காளர்கள், இதரர், 59 பேர் உள்பட, 2,42,580 பேர் உள்ளனர்.

பர்கூர் சட்டசபை தொகுதியில், 1,22,187 ஆண், 1,25,103 பெண், 18 இதரர் உள்பட, 2,47,308 பேர் உள்ளனர். கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதியில், 1,33,346 ஆண், 1,38,850 பெண் மற்றும், 51 இதரர் உள்பட, 2,72,247 பேரும் உள்ளனர். வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில், 1,29,442 ஆண், 1,25,684 பெண், 37 இதரர் உட்பட, 2,55,163 பேரும், ஓசூர் சட்டசபை தொகுதியில், 1,75,498 ஆண், 1,71,276 பெண், 96 இதரர் உட்பட, 3,46,870 பேரும், தளி சட்டசபை தொகுதியில், 1,25,684 ஆண், 1,20,017 பெண், இதரர், 44, உட்பட, 2,45,745 பேர் என மாவட்டம் முழுவதும், 16,09,913 வாக்காளர்கள் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் வாக்காளர் பதிவு அலுவலர், ஆர்.டி.ஓ., தாசில்தார் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதில் தங்கள் பதிவுகள் மற்றும் திருத்தங்கள் குறித்து, பொதுமக்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபு மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us