sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பைக்கில் அதிவேக பயணம் 18 ‍பேருக்கு அபராதம் விதிப்பு

/

பைக்கில் அதிவேக பயணம் 18 ‍பேருக்கு அபராதம் விதிப்பு

பைக்கில் அதிவேக பயணம் 18 ‍பேருக்கு அபராதம் விதிப்பு

பைக்கில் அதிவேக பயணம் 18 ‍பேருக்கு அபராதம் விதிப்பு


ADDED : ஜூன் 09, 2025 03:07 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவே-கமாக ரேஸ் சென்ற, 18 பேருக்கு போக்குவரத்து போலீசார் அப-ராதம் விதித்தனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் தனியார் மற்றும் ஐ.டி., நிறு-வனங்களின் பணியாற்றும் ஊழியர்கள், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், பல்வேறு இடங்களை பார்க்கவும், ஊருக்கும் விலை உயர்ந்த பைக்குகளில் செல்கின்-றனர். ஓசூர் - கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சா-லையில் இவர்கள், அதிவேகமாக செல்லும் போது, மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், அதிக சத்தம் கொடுக்கும் பைக்குகளால், பிற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படு-கின்றனர். இதனால், பைக்கில் ரேஸ் போன்று அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகளை பிடித்து, அபராதம் விதிக்க, மாவட்ட போலீசாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை உத்தரவுபடி, கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே நேற்று மாலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஓசூரி-லிருந்து உயர் ரக பைக்குகளில் அதிவேகமாக சென்ற, 18 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் மீது அதிவேகமாக வாக-னங்களை ஓட்டுதல், அதிக ஒலி எழுப்புதல், பொதுமக்கள் பயன்-படுத்தும் சாலையை ரேஸ் சாலையாக பயன்படுத்திய காரணங்க-ளுக்காக மொத்தம், 70,000 ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்-பட்டது. இதையறிந்த பின்னால் வந்த பிற பைக் ஓட்டிகள், போலீசாரிடம் சிக்காமல் திரும்பிச் சென்றனர்.






      Dinamalar
      Follow us