/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டிட்டோ ஜாக் மறியல் போராட்டம் கி.கிரியில் 183 ஆசிரியர்கள் கைது
/
டிட்டோ ஜாக் மறியல் போராட்டம் கி.கிரியில் 183 ஆசிரியர்கள் கைது
டிட்டோ ஜாக் மறியல் போராட்டம் கி.கிரியில் 183 ஆசிரியர்கள் கைது
டிட்டோ ஜாக் மறியல் போராட்டம் கி.கிரியில் 183 ஆசிரியர்கள் கைது
ADDED : ஜூலை 18, 2025 01:27 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, டிட்டோ ஜாக் எனும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
கிருஷ்ணமூர்த்தி, மாரப்பன் தலைமை வகித்தனர்.
மாவட்ட தலைவர் அருண் பிரகாஷ்ராஜ், டிட்டோ ஜாக் நிதி காப்பாளர் சேகர், கல்வி மாவ ட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ், மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் தியோடர் ராபின்சன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன், போராட்டத்தை துவக்கி வைத்து பேசினர்.
போராட்டத்தில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடை
முறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதியக்குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டு, ஊதிய முரண்பாடுகளை நீக்கி, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கடந்த, 2006, ஜன., 1 முதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷம் எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட, 183 ஆசிரியர்களை
கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி தலைமையிலான டவுன் போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.