sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 2 குழந்தைகளுடன் தாய் மாயம்

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

2 குழந்தைகளுடன் தாய் மாயம்


ADDED : ஏப் 09, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 01:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

ஊத்தங்கரை:ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டி அருகே உள்ள கூர்சம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 26. இவரின் மனைவி அழகி, 23. தம்பதியருக்கு நிதிஷ்குமார், 4, தர்மேஸ்வரன், 2, என இரண்டு குழந்தைகள். கடந்த 6ம் தேதி காலை, 10 மணிக்கு அழகி, தன், 2 குழந்தைகளுடன் மாயமானார். கணவர் மணிகண்டன் புகார் படி, சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மொபைல் பழுது நீக்க இலவச பயிற்சிஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்புகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியிலுள்ள இந்தியன் வங்கி சுய

வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், மொபைல் போன் பழுது நீக்குவதற்கான இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

இது குறித்து, இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியிலுள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் துவங்க, பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதன்படி, தற்போது, 30 நாட்கள் மொபைல்போன் பழுது நீக்குவதற்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு, 8ம் வகுப்பு படித்த, 18 முதல், 45 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் வரும், 15க்குள் நேரில் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில், சீருடை, காலை, மதியம் உணவும், பயிற்சிக்கான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி காலை, 9:30 முதல் மாலை, 5:30 மணி வரை நடக்கும். முடிவில் பயிற்சி சான்றிதழும், தேர்ச்சி சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, இயக்குனர், இந்தியன்

வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலும், மேலும், 94422 47921, 90806 76557 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us