தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தனியார் ஊழியர்களை தாக்கிய 2 பேர் கைது

தனியார் ஊழியர்களை தாக்கிய 2 பேர் கைது

தனியார் ஊழியர்களை தாக்கிய 2 பேர் கைது


ADDED : மார் 04, 2026 08:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 08:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், குமுதேப்பள்ளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார், 19. அதே பகுதியை சேர்ந்தவர் முரளி, 19. இருவரும், ஓசூர் அசோக் லேலண்ட் யூனிட் - 2ல் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே கடந்த, 1ம் தேதி இரவு, 11:45 மணிக்கு, குமுதேப்பள்ளியில் வைத்து தகராறு ஏற்பட்டது. இதில், வசந்தகுமார் மற்றும் முரளி ஆகியோரை, கத்தி, மரக்கட்டையால் தாக்கிய, 3 பேர் கொண்ட கும்பல், கொலை மிரட்டல் விடுத்தது.

இதில் காயமடைந்த இருவரும், ஓசூர் தனியார் மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டனர். வசந்தகுமார் புகார்படி, அவர்-களை தாக்கியதாக, குமுதேப்பள்ளியில் தங்கி ஓசூர் அசோக் லேலண்ட் யூனிட்- 2ல் பணியாற்றும், தர்மபுரி மாவட்டம், பூசா-ரிப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார், 22, திருப்பத்துார் மாவட்டம், ஜெய்பீம் நகரை சேர்ந்த அண்ணாமலை, 22, ஆகியோரை, ஹட்கோ போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரியை சேர்ந்த கவின், 21, என்பவரை தேடி வருகின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us