/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
/
ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
ADDED : பிப் 08, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சுல்தான் பாஷா மற்றும் போலீசார், சுண்டகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, தர்ம-புரியில் இருந்து பெங்களூரு சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, 7 டன் ரேஷன் அரிசியை பெங்களூருக்கு கடத்தி செல்வது தெரிந்தது.
இதனால் லாரியை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம், குப்பத்தை சேர்ந்த முருகன், 28, உடன் இருந்த அதே
பகுதியை சேர்ந்த மதிய-ழகன், 25, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்க-ளையும்,
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியையும், கிருஷ்-ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு
போலீசார் வசம் ஒப்படைத்தனர்.