/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
2 நாள் தொல் எழுத்து பயிற்சி நிறைவு; பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
/
2 நாள் தொல் எழுத்து பயிற்சி நிறைவு; பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
2 நாள் தொல் எழுத்து பயிற்சி நிறைவு; பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
2 நாள் தொல் எழுத்து பயிற்சி நிறைவு; பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
ADDED : பிப் 10, 2025 01:31 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், மாவட்ட புத்தக பேரவையும் இணைந்து, 2 நாள் தொல் எழுத்து பயிற்சியை நடத்தின.
அருங்காட்சியக வளாகத்தில் நடந்த பயிற்சியை காப்பாட்சியர் சிவக்குமார், புத்தக பேரவை தலைவர் சென்னப்பன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஓய்வுபெற்ற காப்பாட்சியர் கோவிந்தராஜ், மனிதனின் தோற்றம், கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள், அதன் பின் தோன்றிய வரி வடிவம், எழுத்து தோன்றியதன் வரலாறு, மலர்ச்சி அடைந்த எழுத்து வடிவங்கள், இந்தியாவில் பானை ஓடுகளில் குறியீடுகள், பிராமி எழுத்துகள் தமிழகத்தில் மட்டுமே காணப்படுவதன் சிறப்பு மற்றும் முக்கியத்துவம், மற்ற மொழி எழுத்துகளில் இருந்த பிராமி அல்லது தமிழி எழுத்துக்கள் எவ்வாறு வேறுபடுகின்றன. தமிழி எழுத்தின் வரலாற்று முக்கியத்துவம், கல்வெட்டை படியெடுத்தல் மற்றும் அதன் எழுத்துக்களை வாசித்தல் குறித்து பயிற்சி அளித்தார்.
இதில், தர்மபுரி, திருப்பத்துார், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த, 40க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். பயிற்சி பெற்றவர்களுக்கு தொல்லியல் அலுவலர் பரந்தாமன் சான்றிதழ்களை வழங்கினார். புத்தக பேரவையின் பொருளாளர் தமிழ்செல்வன், எழுத்தாளர் பென்னேஸ்வரன், ஆசிரியர் ரவி, வரலாற்று ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி, வரலாற்று ஆர்வலர் சதானந்த கிருஷ்ணகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.

