/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரி மாவட்டத்தில் 2 நாள் இ.பி.எஸ்., சுற்றுப்பயணம்
/
கி.கிரி மாவட்டத்தில் 2 நாள் இ.பி.எஸ்., சுற்றுப்பயணம்
கி.கிரி மாவட்டத்தில் 2 நாள் இ.பி.எஸ்., சுற்றுப்பயணம்
கி.கிரி மாவட்டத்தில் 2 நாள் இ.பி.எஸ்., சுற்றுப்பயணம்
ADDED : ஆக 10, 2025 12:55 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணாரெட்டி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக
வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, தளி, ஓசூர், வேப்பனஹள்ளி தொகுதிகளில், நாளை (ஆக.11) மற்றும் நாளை மறுநாள் (ஆக.12) என, 2 நாட்கள், 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார சுற்றுப்பயணத்தை, கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மேற்கொள்கிறார்.
நாளை (ஆக.11) மாலை, 4:10 மணிக்கு வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட ராயக்கோட்டையிலும், 5:00 மணிக்கு தளி தொகுதிக்கு உட்பட்ட கெலமங்கலத்திலும், 5:30 மணிக்கு தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டிலும், பொதுமக்கள் மத்தியில் இ.பி.எஸ்., பேசுகிறார். அதன்பின், ஓசூர் தொகுதிக்கு உட்பட்ட ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை, வேப்பனஹள்ளி தொகுதியில் உள்ள சூளகிரியில் இரவு, 9:00 மணிக்கு, வாகனத்தில் இருந்தவாறு இ.பி.எஸ்., பேச உள்ளார்.
நாளை மறுநாள் (ஆக.12) காலை, 8:00 மணிக்கு, ஓசூரிலுள்ள மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., புதிய அலுவலகத்தை திறந்து வைத்து விட்டு, 8:30 மணிக்கு, ஓசூர் மரகதாம்பிகை உடனுறை சந்திர
சூடேஸ்வரர் கோவிலில் சுவாமி
தரிசனம் செய்கிறார். அதன் பின், ஹில்ஸ் ஓட்டலில், தொழில்முனைவோர், விவசாயி
கள், தனியார் பள்ளி பிரதிநிதி
கள், வணிகர்கள், பில்டர்ஸ், ஆசிரியர்கள் கூட்டமைப்பு பிரதி
நிதிகள் ஆகியோரை, தனித்தனியாக சந்திக்கிறார். இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.