/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பழங்கள், காய்கறிகள் பதப்படுத்த 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி
/
பழங்கள், காய்கறிகள் பதப்படுத்த 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி
பழங்கள், காய்கறிகள் பதப்படுத்த 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி
பழங்கள், காய்கறிகள் பதப்படுத்த 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : செப் 30, 2025 01:53 AM
கிருஷ்ணகிரி, பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்துதல், சேமிப்பு மற்றும் சிப்பமிடுதல் குறித்து, 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் மேம்பாட்டு ஏற்றுமதி கழகத்தின், பழங்கள் மற்றும் காய்கறிகளின் முதல்நிலை பதப்படுத்துதல், சேமிப்பு மற்றும் சிப்பமிடுதல் குறித்த, 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலுள்ள உணவு பதன்செய் பொறியியல் துறையால், கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் தோட்டக்கலைக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது.
இதில், விவசாயிகள், தொடக்க தொழில் முனைவோர் மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். உணவு பதன்செய் பொறியியல் துறை பேராசிரியர் ராமலட்சுமி வரவேற்றார். தோட்டக்கலைக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மை அலுவலர் மற்றும் பேராசிரியர், தலைவர் அனீஷாராணி பயிற்சியை துவக்கி வைத்தார்.
உணவு பதன்செய் பொறியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் பாலகிருஷ்ணன், உணவு பதப்படுத்துதலின் முக்கியத்துவம் மற்றும் பதப்படுத்துதலுக்கு தேவையான நவீன இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார். இணை பேராசிரியர் ஸ்ரீவித்யா, உதவி பேராசிரியர் கோவிந்தன் ஆகியோர் பயிற்சியை வழிநடத்தினர். முகாமில் பங்கேற்ற, 60க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சான்றிதழ் மற்றும் கையேடு வழங்கப்பட்டன. உதவி பேராசிரியர் பர்வீன் நன்றி கூறினார்.