/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கணினி ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி
/
கணினி ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி
ADDED : ஆக 06, 2025 01:12 AM
கிருஷ்ணகிரி, அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினிசார் அடிப்படை அறிவியல் 'ஏஐ' திறனை கற்பிக்கும் நோக்கில், 'டி.என்., ஸ்பார்க்' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, 6 முதல், 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, 4 பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, 2025-2026ம் கல்வியாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், முதல் கட்டமாக, மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ள முழுநேர மற்றும் பகுதிநேர கணினி ஆசிரியர்களுக்கு, 2 நாள் பயிற்சி, நேற்று கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது.
பள்ளி தலைமை ஆசிரியர் நளினி பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர் ரமேஷ்குமார், மாநில கருத்தாளர் முருகேசன், கணினி ஆசிரியர்கள் அன்பழகன், முத்து, வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். இதில், செயற்கை நுண்ணறிவு, ரோபாடிக்ஸ், கோடிங், பைத்தான், ஜியோ ஜிப்ரா ஆகியவை குறித்து, ஆசிரியர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு புதிய பாட புத்தகங்கள் குறித்து, வகுப்பு நடத்த உள்ளனர். இதன், 2ம் கட்ட பயிற்சி, மற்ற கணினி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் நடக்க உள்ளது.