ரேஷன் கடைகளில் 2 நாட்கள் கே.ஒய்.சி., சரிபார்ப்பு முகாம்
ரேஷன் கடைகளில் 2 நாட்கள் கே.ஒய்.சி., சரிபார்ப்பு முகாம்
ADDED : ஆக 07, 2026 04:59 AM

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாவட்டத்தில்
உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நாளை(ஆக. 8-) மற்றும் நாளை மறுநாள் (ஆக.
9-) என, 2 நாட்கள் டிஜிட்டல் கே.ஒய்.சி., சரிபார்க்கும் சிறப்பு முகாம்
நடக்கிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2013-ன் படி, முன்னுரிமை
மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டுகளில் உள்ள
உறுப்பினர்களுக்கு, 100 சதவீத கைரேகை சரிபார்ப்பு பணியை முடிக்க
மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் கடந்த, 2023 அக்., முதல் இப்பணிகள் நடந்து வருகிறது.
இதுவரை, 96.53 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. இப்பணியை,
100 சதவீதம் நிறைவு செய்யும் பொருட்டு நாளை(ஆக. 8-) மற்றும் நாளை மறுநாள்
(ஆக. 9-) என, 2 நாட்கள் காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை,
மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம்
நடக்கிறது. இம்முகாமில், இதுவரை கே.ஒய்.சி., பதிவு செய்யாத குடும்ப
உறுப்பினர்கள் அனைவரும், விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகை
அல்லது கண் கருவிழி பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
