ADDED : நவ 23, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அண்ணாமலையார் அன்னதான சங்க, மாவட்ட தலைவர் சண்முகம் கூறியதாவது: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப விழா வரும் டிச., 3ல் நடக்கிறது. ஆண்டுதோறும் தீபவிழாவின் போது, எங்கள் சங்கம் மூலம், 2 நாட்கள், கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம். அதன்படி தீபத்
திருநாளான டிச., 3 மற்றும் 4ம் தேதி என இரு நாட்களும், தொடர்ந்து, 48 மணி நேரமும், அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள துர்வாசர் கோவில் அருகிலுள்ள மைதானத்தில் அன்னதானம் நடக்கிறது. இதில், 400 சமையல்காரர்கள் மற்றும், 300 தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

