/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி - ஓசூர் இடையே அமைத்த 2 மேம்பாலம் போக்குவரத்துக்கு திறப்பு
/
கிருஷ்ணகிரி - ஓசூர் இடையே அமைத்த 2 மேம்பாலம் போக்குவரத்துக்கு திறப்பு
கிருஷ்ணகிரி - ஓசூர் இடையே அமைத்த 2 மேம்பாலம் போக்குவரத்துக்கு திறப்பு
கிருஷ்ணகிரி - ஓசூர் இடையே அமைத்த 2 மேம்பாலம் போக்குவரத்துக்கு திறப்பு
ADDED : ஆக 10, 2025 12:54 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி - ஓசூர் இடையே கட்டப்பட்டு வந்த, 2 மேம்பாலங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், அடிக்கடி விபத்து நடந்ததால், அதை தடுக்கும் பொருட்டு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மேலுமலை, சாமல்பள்ளம், கொல்லப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. இதனால், இச்சாலையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன்பும், சாமல்பள்ளத்திலும் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், இந்த இரு மேம்பாலங்களின் மீது, வாகனங்களை ஓட்டி பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் பொது போக்குவரத்திற்காக இந்த மேம்பாலங்கள் திறந்து விடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும், கொல்லப்பள்ளி மேம்பாலத்தின் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் எனவும், பின்னர் சூளகிரி - ஓசூர் இடையே கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள்
துரிதப்படுத்தப்படும் எனவும்
அதிகாரிகள் தெரிவித்தனர்.

