ADDED : பிப் 16, 2025 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, மேல்சோமார்பேட்டை வழியாக மண் கடத்தல் நடப்பதாக பையனப்பள்ளி வி.ஏ.ஓ., சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் அவர் அளித்த புகார் படி அப்பகுதியில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வாகன சோத-னையில் ஈடுபட்டனர்.
மேல்சோமார்பேட்டை அருகே நின்ற ஒரு லாரியை சோதனையிட்டதில், ஒரு யூனிட் மண் கடத்தியது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்-றனர். குருபரப்பள்ளி ஆர்.ஐ., ராமநாதன் மற்றும் வருவாய்துறை அலுவ-லர்கள் நேற்று முன்தினம் கும்மனுார் அருகே ரோந்து சென்றனர். அப்போது போலுப்பள்ளி சாலையில் நின்ற லாரியை சோதனை-யிட்டதில், 4 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து அவர்கள் அளித்த புகார் படி, குருபரப்பள்ளி போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.