தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்


ADDED : ஜூன் 22, 2025 01:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2025 01:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கனிம வளம் மற்றும் புவியியலாளர் பிரிவு சிறப்பு தாசில்தார் பாரதி மற்றும் அலுவலர்கள் குருபரப்பள்ளி அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. பாரதி புகார் படி குருபரப்பள்ளி போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

அதேபோல வேப்பனஹள்ளி பெட்ரோல் பங்க் அருகே நின்ற லாரியை சோதனையிட்டதில்,

ஒன்றரை யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. வேப்பனஹள்ளி போலீசார் லாரியை

பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

* பேரிகை வி.ஏ.ஓ., ராஜசேகர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், சொன்னேபுரம்

ரிங்ரோடு ஜங்ஷன் பகுதியில் நேற்று முன்தினம்,

அவ்வழியாக வந்த மினி டிப்பர் லாரியில் சோதனை செய்தனர். அப்போது, உரிய அனுமதி சீட்டின்றி, 11 டன் கற்களை கொண்டு செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், பேரிகை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார், லாரி டிரைவரான பெலத்துார் ஜீவா நகரை சேர்ந்த பூபாலன், 35, என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us