ADDED : ஜூலை 23, 2025 01:15 AM
ஓசூர், ஓசூர், தாசில்தார் குணசிவா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், குமுதேப்பள்ளி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, பேரண்டப்பள்ளியிலிருந்து, கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 6 யூனிட் எம்.சாண்டை கொண்டு செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஹட்கோ போலீசில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
அஞ்செட்டி தாசில்தார் கோகுல்நாத் மற்றும் அதிகாரிகள், அஞ்செட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே நடத்திய வாகன சோதனையில், தேன்கனிக்கோட்டையிலிருந்து, தொட்டமஞ்சு மலை கிராமத்திற்கு, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 2 யூனிட் எம்.சாண்ட் ஏற்றி சென்ற லாரியை பறிமுதல் செய்து, அஞ்செட்டி ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.